5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, தனது வாகனத்தில் உயிரிழந்துள்ளார்
Kanimoli
2 years ago

எரிபொருள் வரிசையில் கடந்த 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, தனது வாகனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீசலை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார்.
பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.



