தேசபந்து மீதான சிஐடி விசாரணை பக்கச்சார்பானதாகத் தெரிகிறது: நீதவான்
Prathees
2 years ago

மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பக்கச்சார்பாகச் செயற்படும் நிலைமையை நீதிமன்றம் அவதானித்து வருவதாக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (22) திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் உண்மைகளை முன்வைக்கும் விசாரணை அதிகாரி பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டதாக நீதிமன்றம் அவதானித்ததால், இது குறித்து நேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.



