கொழும்பில் 600 ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும்: ரோஸி

கொழும்பு மாநகர சபையின் 600 ஏக்கர் பரப்பளவில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அறுவடை பயிர்களை பயிரிட கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் இணையத்தளம் மற்றும் இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 'Curban Harvest by CMC' முகநூல் பக்கத்தின் ஊடாக அறிவு உள்ளிட்ட ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என மேயர் ரோசி சேஸ்னநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு நகரின் சனத்தொகையில் 60 வீதமானவர்களின் வருமானம் குறைவாக இருப்பதால், குடியிருப்பாளர்களை அவர்களது வீட்டு முற்றங்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் சாத்தியமான இடங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதற்காக துரித சாகுபடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தன்னார்வ வல்லுநர்கள், சமூக வலுவூட்டல் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்கேற்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



