10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை
Kanimoli
2 years ago

கொழும்பு புறநகர் பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் எத்துல் கோட்டே, பிடகோட்டே, பெத்தகன, மிரிஹானை, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகோகொடை, பாகொட சந்தியில் இருந்து விஜேராம சந்தியின் 7ஆவது மைல் கல் வரை மற்றும் நுகோகொடை சந்தியில் இருந்து ஹைலெவல் வீதியின் ஊடாக நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து இணை வீதிகளில் உள்ள பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்படப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



