மக்களின் பிரச்சினைகளுக்குத் இறுதித் தீர்வு தேர்தல் மாத்திரமே -ஹர்ஷ

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இறுதித் தெரிவு தேர்தல் மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
தீர்வாக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும், அதன் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதிப் பிரச்சினை காரணமாக பலர் தேர்தலுக்கு இடையூறு விளைவித்தனர். இந்த ஆண்டு அக்குரேகொட பாதுகாப்பு கட்டடத்திற்கு மாத்திரம் 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இது வழக்கமாக தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவே, இந்தப் பிரச்சினை நிதியுதவியுடன் தொடர்புடையது அல்ல.
ஆனால் இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்கான வழி இது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் முழுத் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியுமென நம்ப முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



