IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலுக்கு தாமதமாக சென்ற நிதியமைச்சின் செயலாளர்!
Mayoorikka
2 years ago

10 பேர் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் குறித்த நேரத்திற்கு கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அவர் சுமார் அரை மணித்தியாலம் தாமதமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆரம்பக் கருத்துப் பரிமாற்றம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.



