கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார் தீவிரமடையும் குழப்ப நிலை!
Nila
2 years ago

கொழும்பு - காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இன்று, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் சுற்றுவட்டத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து, மேடைகளை அமைத்துள்ளனர்.
இதனால், லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி செயலகத்தின் இரு வாயில்களையும் மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



