சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரிய தம்மிக்க பெரேரா
Prathees
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சனத் ஜயசூரிய தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேரா அண்மையில் சனத் ஜயசூரியவின் பெயரை சனத் குணதிலக என்றும், அரவிந்த டி சில்வாவின் பெயரை அரவிந்த பெரேரா என்றும் தவறாக எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது
சனத் ஜெயசூர்யா தான் சனத் ஜெயசூர்யா என்று கூறி இணையத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.