இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பின்னடைவு!

Prabha Praneetha
2 years ago
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பின்னடைவு!

லண்டனை தளமாகக் கொண்ட முன்னணி சுற்றுலா பயண விமான நிறுவனமான TUI,இலங்கைக்கான விடுமுறை நாட்களை இந்த மாத இறுதிவரை நீடித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த விமான நிறுவனம் முதலில் ஜூன் 12 வரை, இலங்கைக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது,

தற்போது, ஜூன் 30 வரை அதனை நீடித்துள்ளது.

இலங்கையில் தொடரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையே இதற்கான காரணங்களாகும்.

இந்தநிலையில், புதிய பயணத்திகதிகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுடனும் தொடர்பு கொள்ளப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது

இலங்கையில் நிலவும் நெருக்கடியானது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!