அரிசிக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
கடந்த 10ஆம் திகதி இரவு முதல் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில், ஹட்டன் சதொச கிளையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சதொச கிளையானது ஒரு கிலோ சிவப்பு அரிசியை அதிகபட்ச சில்லறை விலையாக 210 ரூபாய்க்கு வழங்கியதுடன் வாடிக்கையாளர்களுக்கு 3 கிலோ கோதுமை மா மற்றும் 500 கிராம் சீனியை வழங்க சதொச கிளை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சதொச கிளைக்கு வெள்ளை அரிசி கையிருப்பு கிடைக்கவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சிவப்பு மற்றும் வெள்ளை அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் வெளியிட்ட போதிலும், அரிசி ஆலைகள் அந்த விலையில் அரிசியை வழங்குவதில்லை, அதன்படி, சிவப்பு மற்றும் வெள்ளை அரிசியை அதிகபட்ச சில்லறை விலையில் கிலோ 240-250 ரூபாய்க்கு விற்க வேண்டியுள்ளது. விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அரிசி ஆலைகளில் தங்களது தேவைக்கு போதுமான அரிசி கிடைப்பதில்லை என்றும், அரிசி விலை அதிகரித்து வரும் நிலையில் நுகர்வோர் அரிசியை வாங்குவதில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.