நிபந்தனைகளுடன் இலங்கையுடனான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார்- ரஷ்யா

இலங்கையுடனான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து சர்ச்சைக்குரிய நிகழ்வாக இருந்த ரஷ்ய விமானம் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடலில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்துள்ளார்.
விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யா தயார்
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தினால் ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும், எவ்வாறாயினும், அது இலங்கை அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்திற்கு ரஷ்யாவின் ஆதரவை வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு சாதகமாக பதிலளித்த தூதுவர், முன்னாள் ஜனாதிபதியின் சகாப்தம் இலங்கை ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காலம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



