ஈரான் ரயில் விபத்து - உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு

#Crash #Death #Train #Iran
Prasu
3 years ago
ஈரான் ரயில் விபத்து - உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு

கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தபாஸ் நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர். 

மேலும் பல ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருப்பதாக மாகாணத்தின் மேலாண்மைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈரானில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் 87 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!