5 உயர் ரக ஆடுகள் கண்டுபிடிப்பு

#SriLanka #Lanka4
Shana
2 years ago
5 உயர் ரக ஆடுகள் கண்டுபிடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 5 உயர் ரக ஆடுகள் தலைமன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு (08) தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் உயர்ந்த ரக ஆடுகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்த தலைமன்னார் கடற்படையினர் குறித்த ஆடுகளை மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த ஆடுகளில் நான்கு ஆண் ஆடுகளும், ஒரு பெண் ஆடும் உள்ளடங்குகின்றன.

குறித்த ஆடுகள் இந்தியாவுக்கு கடத்தி செல்லப்படும் நோக்கில் கால்கள் கட்டப்பட்டு கிடந்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆடுகளை காணவில்லை என்றும் குறித்த ஆடுகள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து உரிமை கோரியுள்ளார்.

இதனையடுத்து நேற்று (8) மன்னார் நீதிமன்றில் குறித்த சம்பவத்தை தலைமன்னார் பொலிஸார் முற்படுத்தினர்.

இதன்போது உரிமையாளரின் ஆவணங்களை பரிசீலித்த நீதவான், ஆவணங்களில் தெளிவில்லாத தன்மை காரணமாக சரியான ஆவணங்களை நீதிமன்றிற்கு முற்படுத்துமாறும், அதுவரை தலை மன்னார் பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பில் ஆடுகளை பராமரிக்குமாறும் உத்தரவிட்டார்.

நீதவான் உத்தரவிட்டதை அடுத்து குறித்த ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!