சற்றுமுன் இடம்பெற்ற கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய ரயில் விபத்தில் இருவர் பலி!
#SriLanka
#Accident
#Lanka4
Shana
2 years ago

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.



