தமிழக நிவராண உதவி வழங்கும் நிகழ்வு 2 ஆம் கட்டமாக யாழில் இடம்பெற்றது
Mayoorikka
2 years ago

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்தியத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் வாழ்வாதார நிவராண உதவி பொதிகளின் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கிவைக்கும் இன்று யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் வாழ்வாதார உதவிப்பொதிகளை வழங்கி வைப்பதற்காக பிரதம அதிதியாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் யாழ்ப்பாண இந்திய உதவித்தூதரக அதிகாரி மேனன் ஜீவன் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பொதிகளை கொண்டுசெல்லுவதற்கான வாகனங்களில் எற்றிவைத்தனர்.
இதன் போது நான்கு இலட்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோகிராம் அரிசிப்பொதிகளும் ஏனைய பால்மாவும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
இதில் 11 பிரதேச செயலாளர்கள் பிரிவில் நாற்பத்தி ஐயாயிரம் பேர்களுக்கு இரண்டாம் கட்டப்பொதிகளாக வழங்கப்படுகின்றது.



