மின்சார பொறியியலாளர்கள் சங்கத்திற்கு தடை உத்தரவு
Mayoorikka
2 years ago

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு தொடர்ந்து மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இலங்கை மின்சார சபையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



