இராஜினாமா செய்த பின்னர் மஹிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – நாமல்
Prabha Praneetha
2 years ago

பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, எந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல், அமைச்சரவைக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவர் கலந்துகொள்வார் என்று தான் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எப்போதும் நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர் என்பதோடு, எப்போதும் அதை மதிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.



