ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்துள்ள கனடா

#Russia #Canada
Prasu
3 years ago
ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்துள்ள கனடா

ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் இரசாயனத் தொழில்களின் செயல்பாட்டிற்குத் தேவையான கணக்கியல் மற்றும் விளம்பரம் போன்ற 28 சேவைகளின் ஏற்றுமதியைத் தடைசெய்து, ரஷ்யா மீது கனடா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, ரஷ்யாவின் கூட்டாட்சி பட்ஜெட் வருவாயில் சுமார் 50 சதவீதத்தைக் கொண்டுள்ள வர்த்தகத்தை இந்த நடவடிக்கைகள் பாதிக்கும் என்று குறிப்பிட்டள்ளார்.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, கனடா 1,070 க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஒட்டாவா விளாடிமிர் புட்டினின் அர்த்தமற்ற போருக்குப் பொறுப்பேற்பதை இடைவிடாமல் தொடரும் என்று ஜோலி கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!