ஜெர்மனி சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணை சுட்டு கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்து கொண்ட நபர்
#Death
Prasu
3 years ago

ஜெர்மனியின் ஸ்விட்ச்இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு நேற்று மதியம் 1 மணிஅளவில் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர் அங்கு இருந்த 53 வயதான பெண்ணை சுட்டு விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தான் வைத்து இருந்த அதே துப்பாக்கியால் அந்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன..? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



