டுவிட்டர் நிர்வாகத்தை எச்சரித்த எலன் மஸ்க்

#ElonMusk #Warning #Twitter
Prasu
3 years ago
டுவிட்டர் நிர்வாகத்தை எச்சரித்த எலன் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் நம்பர் 1  பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இந்த டுவிட்டர் நிறுவனம் 44 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான  ஒப்பந்தம் விரைவில் முழுமையடைய உள்ளது. அதே சமயத்தில் டுவிட்டரை எலான் மஸ்கிடம்  ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருகின்றது.

இந்நிலையில் டுவிட்டர் பயனாளர்கள் குறித்த தரவுகள், டுவிட்டரில் போலியாக உள்ள கணக்குகளின் எண்ணிக்கை விவரங்கள் உள்ளிட்ட தரவுகளை தன்னிடம் டுவிட்டர் நிர்வாகம் தர மறுத்தால் டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!