எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்!
#SriLanka
#Food
#Lanka4
Shana
2 years ago

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் வழமையான உணவு வழக்கம் குறைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவு பாதுகாப்பு தினத்திற்கு இணையாக அந்த வேலைத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரசாயன மற்றும் சேதன பசளை உள்ளிட்ட விவசாய இராயனங்களை இறக்குமதி செய்வதற்காக சர்வதேசத்திடம் உடனடியாக நிதியுதவியை பெற்றுக் கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் வலியுறுத்தியுள்ளது.



