பாகிஸ்தானில் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழப்பு
#Pakistan
#Accident
#Death
Prasu
3 years ago

வேனில் பயணித்த 18 பயணிகளும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் மலைப்பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது
ஜோப் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது, கில்லா சைஃபுல்லா பகுதிக்கு அருகே மலை உச்சியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த வேனில் பயணித்த 18 பயணிகளும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக துணை ஆமையர் ஹாபிஸ் முகமது காசிம் தெரிவித்துள்ளார்.



