எரிவாயு விநியோகம் இடம்பெறாது-லிட்ரோ எரிவாயு நிறுவனம்
Kanimoli
2 years ago

நாளை(9) எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ கொள்ளளவு கொண்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது.
இதன்காரணமாக, மக்களை எரிவாயு கொள்வனவு செய்வதற்க்காக வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், விரைவில் விநியோகத்தை மீள ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



