பசிலின் இடத்திற்கு முன்னணி வர்த்தகர்? வெளியாகிய தகவல்
Mayoorikka
2 years ago

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பதவிக்கு யார் வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நேற்றிரவு (07) பசில் ராஜபக்ஷ தனது கட்சிக்கு நெருக்கமான குழுவொன்றுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் அறியப்படுகின்றது.
இந்த நிலையில், பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாகவுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்கு முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.



