காவல்துறை அதிகாரியை தாக்கி, வாகனத்தை சேதமாக்கிய இளைஞர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
Shana
2 years ago

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பஞ்சிக்காவத்தையில் காவல்துறை அதிகாரியை தாக்கி, காவல்துறை வாகனத்திற்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைவாக அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.



