இலங்கையில் மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
#SriLanka
#Lanka4
#School
#Student
Shana
2 years ago

அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள் தமது பிள்ளைகளின் பாடசாலைப் பயணங்களையும், அன்றாடப் பயணங்களையும் வழமைப்போல் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், களுத்துறை மாவட்டத்தில் பிரதேசமொன்றில் சிலர், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு, பல தசாப்தங்களுக்கு முன்னர் பயன்படுத்திய போக்குவரத்து முறைமையான மாட்டு வண்டில்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியின் ஆழத்தை விளக்கும் இந்தக் காட்சிகள் இன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.



