இந்தியாவிடம் இருந்து 55 மில்லியன் டாலர் கடன் பெறும் இலங்கை
Kanimoli
2 years ago

2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதன் பொருட்டு, எக்ஸிம் என்ற இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் இதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.



