மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது
Kanimoli
2 years ago

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த நபர் கொழும்பில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கைது செய்யப்பட்ட அந்த நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை அடையாள அணிவகுப்பில் உட்படுத்துவதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



