சடுதியாக உயர்வடைந்த டின் மீனின் விலை
Kanimoli
2 years ago

சந்தையில் தற்போது பெரிய டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை விட தற்போது மிக அதிக விலைக்கு டின் மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதுவரை ஒரு பெரிய டின் மீனின் விலை 450 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.
மேலும், முட்டை, இறைச்சி, மீன், உலர் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



