இலங்கையில் இருந்து மீண்டும் மொஸ்கோ நோக்கி பயணிக்கும் ஏரோஃப்ளோட் விமானம்!
Nila
2 years ago

ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான Aeroflot எனும் விமானம் இன்று மாலை மொஸ்கோ விற்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Aeroflot விமானத்திற்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவினை கொழும்பு வனிக நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளதை தொடர்ந்த இவ்வாறு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஏரோப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இவ்விவகாரத்தால் இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர மோதலும் ஏற்பட்டது.
இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்துவதற்கு Aeroflot நிறுவனம் தீர்மானித்தது.
அத்துடன், இலங்கை தூதுவரை அழைத்து, ரஷ்யா அதிருப்தியையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



