இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
Mayoorikka
2 years ago

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது விற்பனை செய்யப்பட்ட அனுமதி சீட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்த பணத்தை பயன்படுத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



