சீனாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்: பலர் உயிரிழப்பு! தேசிய அவசர நிலை பிரகடனம்

#China
Mayoorikka
3 years ago
சீனாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்: பலர் உயிரிழப்பு! தேசிய அவசர நிலை பிரகடனம்

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், அடுத்த 15 நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய அவசர நிலை 3 ஐ பிரகடனம் செய்த அவசர மேலாண்மை அமைச்சகம், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, சிச்சுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 90,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!