விபத்தில் இசையமைப்பாளர் மரணம்
Prathees
3 years ago

அம்பலாங்கொடை பொரம்ப சந்தியில் நேற்று முன்தினம் (31) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உள்ளூர் இசைக்கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய 'பட்ட' லொறியின் சாரதி அம்பலாங்கொடை பொலிஸாரால் கடந்த 31ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பொரம்ப பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து அம்பலாங்கொடை நகரத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது அம்பலாங்கொடையிலிருந்து பொரம்ப நோக்கிச் சென்ற பட்டா லொறியில் மோதியதில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததை அம்பலாங்கொடை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர் உயிரிழந்தவரிடமே இசை கற்றவர் என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.



