பாரிஸில் தாயை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மகன்
பாரிஸ் சாந்த்அன் (Sainte-Anne) பகுதியில் வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண்ணை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய நபர் எனவும் நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேக நபரை மனநல மருத்துவரின் கண்கானிப்பின் கீழ் வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட 71 வயதுடையவர் எனவும் சம்பவத்தன்று இரவு உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது.
அதற்கமைய அங்கு சென்று பார்த்த போது தாய் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயின் உடல் மீது கிட்டத்தட்ட 10 முறை கத்தியால் குத்திய காயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வீட்டின் மற்ற அறையில் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சகோதரன் இருந்தார் என தெரியவந்துள்ளது.உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் கத்தியும் மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்தற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது சந்தேக நபரான மகன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள நிலையில் நேற்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



