மாலியில் ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இடையே மோதல் - 500 பொது மக்கள் பலி

#Death
Prasu
3 years ago
மாலியில் ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இடையே மோதல் - 500 பொது மக்கள் பலி

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை மாலியில் ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஏற்கனவே அவநம்பிக்கையான பாதுகாப்பு நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உயிரிழப்புகள் முன்னைய காலாண்டில் 324% உயர்வை பிரதிநிதித்துவப்படுத்தியது மற்றும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதில் அல்லது அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய குழுக்களை வன்முறை பிரச்சாரங்களில் இருந்து தடுக்க மாலியின் இராணுவ ஆட்சிக்குழுவின் தோல்வியை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2020 ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த மாலியின் இராணுவம் இதுத் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. 

மாலியன் ஆயுதப் படைகள், சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு இராணுவக் கூறுகளால் ஆதரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!