எத்தியோப்பியாவில் பள்ளி மீது ஷெல் தாக்குதல் நடத்திய படைகள்
#Missile
#Attack
#School
Prasu
3 years ago

ஐக்கிய நாடுகள் சபையின் உள் ஆவணங்கள் மற்றும் பிராந்தியப் படைகளின் படி, எரித்ரியப் படைகள் வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு நகரத்தில் வார இறுதியில் ஷெல் தாக்குதல் நடத்தினர்.
2020 நவம்பரில் தொடங்கிய மோதலில் இரண்டு மாத அமைதிக்குப் பிறகு இது ஒரு அரிய குண்டுவெடிப்பாகும்.
ஷிராரோவில் உள்ள மனிதாபிமான அமைப்புகளின் தகவலை மேற்கோள் காட்டி, குறைந்தது 23 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் பள்ளியைத் தாக்கியதாகவும் கூறுகின்றன.
ஒரு 14 வயது சிறுமி உயிரிழந்ததுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர் மற்றும் 12 வீடுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்



