ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் - அதிர்ச்சித் தகவல்

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது.
புடினின் பார்வை மங்கி வருவதாகவும், அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதாக ரஷ்ய உளவாளி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் புடினின் கண்பார்வை மங்கி வருவதாகவும், தொலைக்காட்சியில் தோன்றும்போது ஏதேனும் படிக்க நேர்ந்தால் அதனைப் பெரிய எழுத்துகளில் எழுதினால் மட்டுமே அவரால் படிக்க முடியும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு பக்கத்திலும் ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இருக்கும் அளவுக்குப் பெரிய எழுத்துகளில் எழுதினால் மட்டுமே படிக்கும் அளவுக்கு அவரது கண்பார்வை மோசமடைந்து வருவதாகவும், அவரது கை, கால்கள் கட்டுப்பாடின்றி நடுங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடினுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அதனால் அதன் பின்னர் குறுகிய காலத்திற்கு அவரது உடல்நிலை செயலிழக்க வாய்ப்புள்ளதால் அவரது அதிகாரம் வேறொருவரிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புடினின் உடல்நிலை குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.



