சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் புத்துயிர் பெற்றது
#SriLanka
#Fuel
Mugunthan Mugunthan
3 years ago

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த சுத்திகரிப்பு ஆலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திங்கட்கிழமை புதுப்பித்துள்ளது. ஆனால், அன்றைய தினம் தொழில்நுட்பக் கோளாறால் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தொழிநுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை நிதாஹஸ் சேவக சங்கமயவின் பெற்றோலியக் கிளையின் இணைத் தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்தார்.
இதேவேளை,எரிபொருட்களின் தரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.



