21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் பசில் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியம்!
Mayoorikka
3 years ago

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



