மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் – GMOA
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
தற்போது 12 முதல் 20 வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமின் விஜேசிங்க கூறியுள்ளார்.
அத்தோடு, 120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



