மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது” அரச ஊடகம் பரபரப்பு செய்தி
Mayoorikka
3 years ago

உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் ரஷ்ய அரசு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் Olga Skabeyeva கூறியுள்ளார்.
Rossiya-1 எனும் நிகழ்ச்சியில் இது குறித்து அவர் பேசியதாவது,
ரஷ்யா இப்போது நேட்டோவை இராணுவமயமாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்று உக்ரைன் செய்தி இணையத்தளமான உக்ரைன் வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்திருக்கலாம் என்று Olga கூறினார்.
இதையடுத்து ஒரு உண்மையான போர் தொடங்கிவிட்டது. இது மூன்றாம் உலகப் போர் தான் என்றார்.
நாங்கள் உக்ரைனை மட்டுமல்ல, நேட்டோ முழுவதையும் இராணுவமயமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார்.



