புதிய இராணுவ தளபதியாக விக்கும் லியனகே நியமனம்
Prasu
3 years ago

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.
தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் நாளை (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.



