பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: 695 பில்லியன் ஒதுக்கீடு
Mayoorikka
3 years ago

நடப்பு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குறை நிரப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 695 பில்லியன் ரூபாவை பொதுமக்களின் நிவாரணத்துக்காக ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் முன்வைத்த உள்நாட்டு இறைவரி சட்டம், பெறுமதிசேர் வரி சட்டம், தொலைதொடர்பு சட்டம், நிதிமுகாமைத்துவ சட்டம், பந்தய சூது சட்டம் போன்றவற்றை திருத்துவதற்கான யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



