ஆளும் கட்சியின் விசேட கூட்டம்
Prabha Praneetha
3 years ago

ஆளும் கட்சி பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



