லிட்ரோ எரிவாயு நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு
#SriLanka
#Lanka4
#Litro Gas
Shana
3 years ago

இன்றைய தினம் நாட்டிற்கு 3,950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கூடிய கப்பல் ஒன்று வந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை எரிவாயுவை தரையிறக்கும் பணி ஆரம்பமானதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இவற்றில் 60 சதவீதமானவை அதாவது சுமார் 30 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.



