அட்டுலுகம சிறுமி மரணம் : குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்
Mayoorikka
3 years ago

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.
இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



