ஜனாதிபதியின் பணிப்புரையை மீறியதன் காரணமாகவே இராணுவத் தளபதி பதவி நீக்கம் - ரஞ்சித் மத்தும பண்டார
Reha
3 years ago

ஜனாதிபதியின் பணிப்புரையை மீறியதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதியை பதவியில் இருந்து நீக்கியதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள் சட்டத்தால் அலட்சியமாகிவிட்டதாகவும், உயர் போலீஸ் அதிகாரிகளை தெருக்களில் தாக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அமைச்சரவையை மாற்றுவதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனவும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



