அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள்
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



