முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடற்பயிற்சிக்காக உச்சபட்ச பாதுகாப்பு !
Nila
3 years ago

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடற்பயிற்சிக்காக உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதற்கமைய சுமார் 200 பொலிஸாரை பாதுகாப்புக்காக ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம், பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது கொழும்பில் உள்ள சொகுசு வீடொன்றில் பாதுகாப்பாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சக்களுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த பாதுகாப்பு தரப்பினர் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



