நிறைவேற்று அதிகார... ஜனாதிபதி முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பு... அவசியம், என சட்டமா அதிபர் அறிவிப்பு.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நாடாளுமன்றிற்கு தனிநபர் பிரேரணையாக சமர்பிப்பித்தனர்.
இந்நிலையில் அவர்கள் சமர்ப்பித்த 21 மற்றும் 22ஆம் திருத்தங்கள் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது.
ஆகவே அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உத்தரவிட்டு வியாக்கியானம் அளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான விசாரணையின் போது இதனை சட்டமாதிபர் அறிவித்தார்.
சட்டமாதிபர் சார்பில் இம்மனுக்கள் தொடர்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா இதனை உயர்நீதிமன்றில் அறிவித்தார்.
மத்தும பண்டார மற்றும் விஜயதாஷ ராஜபக்ஷ ஆகியோரின் தனிநபர் பிரேரணைகளை சவாலுக்குட்படுத்தும் குறித்த மனுக்கள் நேற்று முன்தினமும், நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



